புதுச்சேரி:கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் ஆறு நபர்களுக்கும், காரைக்காலில் ஒருவரும், மாஹேவில் ஒருவரும் என மொத்தம் எட்டு நபர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, மாநிலத்தில் தற்போது 250 நபர்கள் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். மாநிலத்தில் இதுவரை ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 968 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 93 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.