தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதுச்சேரியில் இதுவரை இல்லாத அளவு கரோனா! - coronavirus second wave

புதுச்சேரி: கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 1,819 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதுச்சேரியில் இதுவரை இல்லாத அளவு கரோனா
புதுச்சேரியில் இதுவரை இல்லாத அளவு கரோனா

By

Published : May 5, 2021, 4:53 PM IST

புதுச்சேரியில் நாளுக்கு நாள் கரோனா தொற்றின் இரண்டாம் அலையானது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் 6,893 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 1,819 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதில் புதுச்சேரியில் 1,435 பேர், காரைக்காலில் 182 பேர், ஏனாமில் 180 பேர், மாஹேவில் 22 பேர் ஆகியோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 11,717 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், 52,517 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதில் புதுச்சேரியில் 17 பேரும், ஏனாமில் ஒருவர் என 18 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து மாநிலத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 883ஆக அதிகரித்துள்ளது. அதுபோல இன்று (மே.05) ஒரேநாளில் 933 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 2,06,099 பேர் கரோனா தடுப்பூசி செலுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் செங்கல்பட்டில் 11 பேர் உயிரிழந்த பரிதாபம்

ABOUT THE AUTHOR

...view details