தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கோவிட்-19: காஷ்மீரில் மே 17வரை ஊரடங்கு நீட்டிப்பு - கோவிட் 19

காஷ்மீர்: கரோனா பரவல் அதிகரித்ததை தொடர்ந்து, மே 17ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

corona curfew
கோவிட்-19

By

Published : May 9, 2021, 5:04 PM IST

கரோனா இரண்டாம் அலை உச்சத்தில் உள்ளது. தினந்தோறும் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் கரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். பல மாநிலங்களில் கரோனா பரவலை கட்டுபடுத்த, முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அந்த வரிசையில், காஷ்மீரிலும் கரோனா பரவல் அதிகரித்ததால், மாநிலத்தின் 20 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த உத்தரவானது நாளை (மே.10) காலை 7 மணியுடன் முடிவடைய இருந்த நிலையில், மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, காஷ்மீரில் மே 17 ஆம் தேதி, ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 4,788 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மாநிலத்தில் மொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 11 ஆயிரத்து 742ஆக அதிகரித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details