புதுச்சேரியில் கடற்கரை சாலையில் மக்கள் பயன்பாட்டிற்கு விதிக்கப்பட்டிருந்த தடை இரு தினங்களுக்கு முன் நீக்கப்பட்டது. மக்கள் கூடும் பகுதியில் தகுந்த இடைவெளி கடைபிடிக்க வலியுறுத்தி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது.
கடற்கரைச் சாலையில் கரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி! - நாட்டுப்புற கலைஞர்கள்
புதுச்சேரி: புதுச்சேரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நாட்டுப்புற கலைஞர்களின் கரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி, கடற்கரைச் சாலையில் நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து, புதுச்சேரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நாட்டுப்புற கலைஞர்களின் கரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி, இன்று கடற்கரைச் சாலையில் நடைபெற்றது. நாட்டுப்புற கலைஞர்கள் பம்பை, உடுக்கை போன்ற வாத்தியங்களுடன் கடற்கரைக்கு வருகை தரும் பொதுமக்கள், சுற்றுலா பயணிகளிடம் தகுந்த இடைவெளியுடன் அமர்ந்து உரையாடும் படி கேட்டுக்கொண்டனர்.
மேலும், முககவசங்களை சரியாக அணிய வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். இதுதவிர கரோனா விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களையும் பொதுமக்களிடையே விநியோகித்தனர்.