புதுச்சேரி: சென்னை துறைமுகத்தில் இருந்து சொகுசு பயணிகள் கப்பல் சேவை திட்டத்தை கடந்த வாரம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
‘கோர்டிலியா குரூஸ்’ என்ற தனியார் நிறுவனத்தின் மூலம் சென்னையில் இருந்து விசாகப்பட்டினம், புதுச்சேரி மற்றும் ஆழ்கடல் பகுதிகளுக்கு சொகுசு கப்பலில் பயணிக்கும் வகையிலான திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என்று அறிவிக்கப்பட்டது.
இதனிடையே அந்த கப்பலில் கேசினோ உள்ளிட்ட கேளிக்கை நிகழ்வுகள் அதிகம் உள்ளதால் கலாச்சார சீர்கேட்டை ஏற்படுத்தும் என புதுச்சேரி வந்து செல்ல அதிமுக, காங்கிரஸ் மற்றும் சில அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சொகுசு கப்பல் வந்து செல்ல இதுவரை அனுமதிக்கப்படவில்லை என சமீபத்தில் துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்திருந்தார்.
அனுமதியின்றி புதுச்சேரி வந்த ‘கோர்டிலியா குரூஸ்’ சொகுசு கப்பல் இந்த நிலையில் சென்னையில் இருந்து புறப்பட்ட சொகுசு கப்பல் இன்று அதிகாலை 4 மணியளவில் புதுச்சேரி வம்பாகீரப்பாளையம் கடற்கரையில் இருந்து 3 நாட்டிக்கல் மைல் தூரம் சுமார் 5 மணி நேரம் நடுக்கடலில் நின்றது.
எந்த ஒரு கப்பலும் கடற்கரையில் இருந்து கடலில் ஓர் குறிப்பிட்ட தூரம் வரை வரும் போது மாநில துறைமுக அதிகாரிகளிடம் உரிய அனுமதி வாங்க வேண்டும். ஆனால் இந்த கப்பலுக்கு உரிய அனுமதி வழங்காத காரணத்தால் கடற்படையினர் கப்பலை எடுத்து செல்ல அறிவுறுத்தினர். அனுமதியின்றி சொகுசு கப்பல் புதுச்சேரி கடற்கரை எல்லைக்குள் வந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: 'திரை தீ பிடிக்கும்... இது விஜய்க்கு இல்லமா... மெய்யாலுமே சூர்யாவுக்கு' - அப்படி என்னாவாம்!