தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்திய-சீன எல்லையில் வசித்த 'பார்வதி' மீட்பு! - பிதோகார்க்

இந்திய-சீன எல்லையில் உள்ள தடை செய்யப்பட்ட பகுதியில் வசித்த பெண்ணை காவலர்கள் மீட்டனர். அப்போது அவர் தாம் பார்வதி என்று கடவுளர் சிவனை திருமணம் செய்துகொண்டுள்ளேன் என்றும் மறுபிறப்பு எடுத்துவந்துள்ளேன் எனவும் அடுத்தடுத்து அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

border
border

By

Published : Jun 5, 2022, 10:50 AM IST

பிதோகார்க்: உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள தடை செய்யப்பட்ட இந்திய-சீன எல்லைப் பகுதியில் 27 வயதான பெண் ஒருவர் தனியாக வசித்துவந்தார். இது தடை செய்யப்பட்ட பகுதி என்பதால் அப்பெண்ணை மீட்க போலீசார் பல்வேறு கட்ட முயற்சிகள் எடுத்தனர்.

எனினும் அப்பெண் தொடர்ந்து வரமறுத்தார். தாம்தான் பார்வதி எனவும் கடவுளர் சிவனை திருமணம் செய்துகொண்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், மறுபிறவி எடுத்து பூமிக்கு வந்துள்ளதாகவும் அப்பெண் கூறினார். இந்த நிலையில் போலீசார் சமாதானம் செய்து அப்பெண்ணை தடை செய்யப்பட்ட பகுதியில் இருந்து மீட்டனர்.

மீட்கப்பட்ட பெண் உத்தரப் பிரதேசத்தின் அலிகார் பகுதியை சேர்ந்த ஹர்மீத் கவுர் என்பது விசாரணைக்கு பின்னர் தெரியவந்தது. இந்தத் தகவலை பிதோகார்க் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லோகேஷ் சிங் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் அப்பெண்னின் மனநிலை தெளிவாக இல்லை எனவும் குடும்பத்தினருடன் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இந்திய-சீன எல்லையின் தடைசெய்யப்பட்ட பகுதியில் பெண் ஒருவர் வசித்து, தாம் பார்வதி, மறுபிறப்பு எடுத்துவந்துள்ளேன் எனக் கூறியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதையும் படிங்க: ஒடிசாவில் அமைச்சர்களாக பதவியேற்கும் 21 எம்எல்ஏ.க்கள்!

ABOUT THE AUTHOR

...view details