கேரளா மாநிலம் கொச்சியில் உள்ள ஆயுத இருப்பு முகாமையில் பணிபுரியும் காவலர் ஒருவர் தனது நண்பர் வீட்டிலேயே 10 சவரன் தங்க நகையைத் திருடியதற்காக கைது செய்யப்பட்டார். அமல் தேவ் எனும் இந்த காவலர் நடேசன் எனும் தனது நண்பர் வீட்டில் கடந்த அக்.13ஆம் தேதி 10 சவரன் தங்க நகையைத் திருடியுள்ளார்.
ஆன்லைன் ரம்மி விளையாட நண்பரின் வீட்டிலேயே திருடிய காவலர் கைது - நகை திருடிய காவலர்
கேரளாவில் ஆன்லைன் ரம்மி விளையாடுவதற்காக தனது நண்பர் வீட்டிலேயே 10 சவரன் தங்க நகையை திருடிய காவலர் கைது செய்யப்பட்டார்.
வீட்டில் நகை திருடு போனதைத் தொடர்ந்து நடேசன் போலீசாரிடம் புகார் அளித்தார். அதனடிப்படையில் விசாரணையைத் தொடங்கிய போலீசார் அமல் தேவ் திருடியதை கண்டுபிடித்து கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஆன்லைன் ரம்மியில் விளையாட திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. அண்மையில் கொல்லத்தில் உள்ள ஓர் கடையில் காவலர் ஒருவர் மாம்பழம் திருடும் சிசிடிவி காட்சி வெளியாகி வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆந்திராவில் கடனை திருப்பி செலுத்தாத தொழிலாளியின் மனைவி கடத்தல்