மணிப்பூர் மாநிலம் சர்சந்தாப்பூரில் ராணுவ கான்வாய் மீது பயங்கரவாதிகள் கண்ணிவெடித் தாக்குதல் நடத்தியுள்ளனர். அஸ்ஸாம் ரைபில்ஸ்(Assam Rifles) படைப்பிரிவைச் சேர்ந்த கான்வாயை குறிவைத்து இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது.
இந்த வாகனங்களில் ராணுவ வீரர்களுடன் அவர்களது குடும்பத்தினரும் இருந்துள்ளதாக முதல்கட்டத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தில் ராணுவ கர்னல் ஒருவர், நான்கு ராணுவ வீரர்கள் ஆகியோர் வீர மரணம் அடைந்துள்ளனர்.
அத்துடன் கர்னலுடன் பயணம் செய்த அவரது மனைவி, மகன் ஆகியோரும் இந்தத் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். தாக்குதலில் மொத்த உயிரிழப்பு ஏழு எனத் தகவல் வெளியாகியுள்ளது.
மணிப்பூர் முதலமைச்சர் பைரன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் பயங்கரவாதத் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதல் கோழைத்தனமானது எனச் சாடிய முதலமைச்சர், மாநில காவல்துறையினர், துணை ராணுவப் படையினர் சம்வயிடத்திற்கு விரைந்துள்ளதாகக் கூறியுள்ளார். சம்பந்தப்பட்டவர்கள் விரைவில் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் எனவும் அவர் தெரித்துள்ளார்.
இதையும் படிங்க:நோரோ வைரஸ்: கேரளா எல்லையில் சோதனை தீவிரம் - மா.சுப்பிரமணியன்