பெங்களூரு: பெங்களூருவைச் சேர்ந்த ஜூய்ங் நிறுவனம் பெட்ரோல் பைக்கை மின்சார வாகனமாக மாற்றும் புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளது. ஆர்டிஓ பதிவு உள்பட 27 ஆயிரம் ரூபாய்க்கு பொதுமக்களுக்கு மாற்றி தர திட்டமிட்டுள்ளனர்.
பெட்ரோல் விலை உயர்வு அனைத்து தரப்பு மக்களுக்கும் பெரும் சிக்கலாக உள்ளது. இரு சக்கர வாகனத்தின் விலை குறைந்தது 70,000 ரூபாயிலிருந்து தொடங்குகிறது, இதனை அடிப்படையாக வைத்து இந்தத் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளோம் என்கிறார் நிறுவனத்தின் துணை தலைவர்.
இந்த தொழில்நுட்பத்தின் மூலம், பெட்ரோல் வாகனத்திலுள்ள எஞ்ஜின் (IC engine) ஹப் மோட்டார் (hub motor) கொண்டு மாற்றப்படும் மற்றும் லித்தியம் அயன் பேட்டரி பொறுத்தப்படும் என்றார்.
பெட்ரோல் பைக்கை மின்சார வாகனமாக மாற்றும் புதிய தொழில்நுட்பம் ஈடிவி பாரத்திடம் ஜூய்ங் நிறுவனத்தின் துணை தலைவர் சச்சின் கூறுகையில், "சராசரியாக 6-7 வருட பழமையான எஞ்ஜின் கொண்டு இயக்கப்படும் வாகனம் 35 முதல் 40 கி.மீ/ லி மைலேஜ் கொடுக்கும். ஜூய்ங் நிறுவனத்தின் இந்த புதிய தொழில்நுட்பத்தால் ஒரு முறை பேட்டரியை சார்ஜ் செய்தால் 55 கி.மீ வரை இயக்க முடியும். முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரி (swappable battery) 85 ரூபாயாகும்.
இந்த வாகனத்தை பெறுவதற்கான முன் பதிவு தொடங்கியுள்ளது. EMI வசதி உள்ளதால் முன்பதிவு செய்ய மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். தற்போது 750க்கும் அதிகமான எரிபொருள் நிலையங்கள் உள்ளன. அதற்கு அருகில் மின்சார வாகனத்திற்கு பேட்டரி மாற்றுவதற்கான ஏற்பாடு செய்யப்படும்.
டிசம்பர் மாதத்தில் வாகனத்தை சந்தைப்படுத்த உள்ளோம். முதலில் பெங்களூருரில் விற்பனை செய்யப்படும் அதன் பின்னர் மற்ற நகரங்களில் விரிவுபடுத்தப்படும்" என்றார்.
இதையும் படிங்க: 'பனி மூடினாலும் பயணம்'- ஸ்ரீநகர்-லே ஜோசிலா சுரங்கப்பாதை.. அடுத்த 4 ஆண்டுகளில்!