அமராவதி:ஆந்திர மாநிலம் திருப்பதி தேவஸ்தானத்தில் பிரமாண எதிர்ப்பு சக்திகள் இருப்பதாக ரமண தீட்சிதர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த ட்வீட் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதுகுறித்து ரமண தீட்சிதர் தனது ட்விட்டர் பக்கத்தில், ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உள்ள அனைத்து அர்ச்சகர்களும் உங்களின் அறிவிப்புக்காக ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் கடும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.
திருப்பதி தேவஸ்தானத்தின் அர்ச்சகர் மற்றும் கோயில் அமைப்பு பிராமண எதிர்ப்பு சக்திகளால் இடிக்கப்படுவதற்கு முன்பு உங்களது உத்தரவு மிகவும் அவசியம் எனப் பதிவிட்டுள்ளார். பிரம்மோற்சவத்தையொட்டி ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி செப்-27ஆம் தேதி திருப்பதிக்கு சென்று ஏழுமலையானுக்கு பட்டுத் துணிகளை காணிக்கையாக வழங்கினார்.