பெங்களூரு:கர்நாடக மாநிலம் கல்புர்கியில் காங்கிரஸ் முன்னாள் அமைச்சரும் சட்டப்பேரவை உறுப்பினருமான பிரியங்க் கார்கே நேற்று (ஆக. 12) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், கர்நாடகவில் அரசு பணிகள் விற்பனை செய்யப்பட்டுவருகின்றன. அந்த வகையில் மாநிலத்தில் அரசு வேலை கிடைக்க பெண்கள் படுக்கையை பகிர்ந்துகொள்ள வேண்டும். ஆண்கள் லஞ்சம் கொடுக்க வேண்டும்.
மாநில அமைச்சர் ஒருவர் அரசு வேலை வேண்டிய பெண்ணிடம் தன்னுடன் படுக்கையை பகிரும்படி தெரிவித்துள்ளார். அண்மையில் கர்நாடகா மின் விநியோக வாரியத்தில் (KPTCL) உதவி பொறியாளர், ஜூனியர் பொறியாளர், கட்டட பொறியாளர் ஆகிய பதவிகளுக்கு தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வின்போது கோகாக் நகரில், ஒரு தேர்வர் புளூ-டூத் உதவியுடன் தேர்வெழுதியதாக கைது செய்யப்பட்டார்.