டெல்லி: மதுபான கடைகளுக்கு உரிமம் வழங்கியதில் ஊழல் நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், டெல்லி துணை முதலமைச்சர் மனிஷ் சிசோடியாவின் வீடு உள்ளிட்ட 21 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், "மதுபான உரிமம் தொடர்பான ஊழல் வழக்கில் மனிஷ் சிசோடியாவை சிபிஐ குற்றவாளியாக ஆக்கியிருக்கலாம். ஆனால், இந்த ஊழலின் முக்கிய குற்றவாளி அரவிந்த் கெஜ்ரிவால்தான்.
இன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் மனிஷ் சிசோடியா செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் திணறினார். அவரது முகமே மாறிப்போனது. மதுபான ஊழல் பற்றி கவலைப்பட வேண்டாம் என்று அவரே கூறினார். உங்கள் மதுபான உரிமக் கொள்கை சரியாக இருந்தால், அதை நீங்கள் ஏன் திரும்பப் பெற வேண்டும்?" என்று கூறினார்.
மத்திய அமைச்சர் அனுராக் தாகூருடன் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட எம்.பி மனோஜ் திவாரி மற்றும் ஆதேஷ் குப்தா ஆகியோர் மனிஷ் சிசோடியாவை "MONEY SHH" என்று விமர்சித்தனர். "MONEY SHH" என்று எழுதப்பட்ட காகிதத்தையும் அவர்கள் காண்பித்தனர்.
இதையும் படிங்க:எதிர்க்கட்சிகளை அச்சுறுத்த மத்திய ஏஜென்சிகளை பயன்படுத்துகிறதா பாஜக அரசு?