தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

குணால் கம்ராவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு! - ரிபப்ளிக்

டெல்லி: உச்ச நீதிமன்றத்திற்கு எதிராக ட்வீட் செய்ததற்காக நகைச்சுவை நடிகர் குணால் கம்ராவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளைத் தொடங்க சட்ட மாணவர்கள் சிலர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

குணால் கம்ராவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு!
குணால் கம்ராவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு!

By

Published : Nov 13, 2020, 9:05 PM IST

"இந்திய குடிமக்களுக்கு நீதிமன்றங்கள் மீது அதிக மரியாதை உண்டு. சட்டத்தை மதிக்கும் நாட்டின் எந்தவொரு குடிமகனும், உச்ச நீதிமன்றத்திற்கு எதிராக இதுபோன்ற ட்வீட்களை வெளியிடுவதை சகிப்புத்தன்மையுடன் பொறுத்துக்கொள்ளமாட்டார்.

மேலும், மன்னிப்பு கேட்டாலும் கம்ரா எந்த அனுதாபத்திற்கும் தகுதியற்றவர். ட்வீட் மிகவும் மோசமாக இருந்தது" என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிபப்ளிக் சேனலின் தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியின் பிணை மனுவை நீதிமன்றம் விசாரித்தபோது, ​​நவம்பர் 11ஆம் தேதி நகைச்சுவை நடிகர் நான்கு ட்வீட்களையும், உச்ச நீதிமன்றம் ஆரஞ்சு நிறத்தில் காட்சியளிப்பதுபோல சித்திரித்து வெளியிட்டிருந்தார்.

தீபாவளி விடுமுறை காலத்திலும் வழக்கு விசாரணையை மேற்கொண்ட உச்ச நீதிமன்றம், கோஸ்வாமிக்குத் தனிப்பட்ட சுதந்திரத்தை மறுக்க முடியாது எனக் கூறி அவருக்குப் பிணை வழங்கியது. உச்ச நீதிமன்றத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கம்ரா ட்வீட் செய்திருந்தார். அதில் உச்ச நீதிமன்றத்தை "இந்த நாட்டின் உச்ச நகைச்சுவை" என்று குறிப்பிட்டிருந்தார்.

இதன் பின்னர், கம்ராவுக்கு எதிராக அவமதிப்பு நடவடிக்கைகளைத் தொடங்க அட்டார்னி ஜெனரலின் ஒப்புதல் கோரி சுமார் 8 கடிதங்கள் எழுதப்பட்டன. இதனையடுத்து அவர், நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர அனுமதியளித்தார். மேலும், இது குறித்து உச்ச நீதிமன்றம் முடிவு செய்யும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்திற்கு எதிராக ட்வீட் செய்ததற்காக நகைச்சுவை நடிகர் குணால் கம்ராவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளைத் தொடங்க சட்ட மாணவர்கள் சிலர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details