இந்தியாவில் பல நகரங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயினை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விலை தொடர்ந்து உயர்வதால் சாமானிய மக்கள் கடும் கஷ்டத்தை சந்திக்கின்றனர்.
சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் தினமும் விலை அதிகரித்து வரும் காரணத்தால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருவதாகக் கூறப்பட்டு வந்தது. ஆனால், தற்போது சர்வதேச கச்சா எண்ணெய் விலை குறைந்த பின்னரும் பெட்ரோல் - டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது.
உலக அளவில் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு 77 டாலர்களுக்கு மேல் விற்கப்படுகிறது. இருப்பினும், உற்பத்தி குறைந்த நிலையில் பல்வேறு நாடுகளில் பெட்ரோல் டீசல் அதிக விலைக்கு விற்பது தொடர்கிறது.