தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

விமானத்தை தவறவிட்ட பெண்; ஊபர் நிறுவனத்திற்கு அபராதம்..!

பெண் பயணியை சரியான நேரத்தில் விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லாததால், ஊபர் நிறுவனத்திற்கு அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெண் விமானத்தை தவறவிட்டதால் ஊபர் நிறுவனத்திற்கு அபராதம்
பெண் விமானத்தை தவறவிட்டதால் ஊபர் நிறுவனத்திற்கு அபராதம்

By

Published : Oct 26, 2022, 10:52 PM IST

மும்பை:ஊபர் நிறுவனத்தைச் சேர்ந்த டாக்சி ஓட்டுநர், பெண் பயணியைச் சரியான நேரத்தில் விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லாததால், அந்தப் பெண் சென்னை செல்லும் விமானத்தைத் தவறவிட்டார். இதனால் நுகர்வோர் நீதிமன்றம் அந்த பெண்ணுக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்து ஊபர் நிறுவனத்திற்கு ரூ.20,000 அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, பெண் பயணி ஒருவர் கடந்த 2018ஆம் ஆண்டு மும்பை நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில்,”கடந்த ஜூன் 12, 2018 அன்று விமான நிலையத்திற்குச் செல்ல ஊபர் டாக்ஸியை பதிவு செய்தேன். டாக்ஸி முன்பதிவு செய்த இடத்திலிருந்து, மும்பை விமான நிலையம் 36 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது, அதற்கு இரண்டு மணி நேரம் போதுமானது.

ஆனால் ஊபர் டாக்சி ஓட்டுநர் காரணமே இல்லாமல் எரிவாயு நிலையத்தில் 15 முதல் 20 நிமிடங்கள் எடுத்துக் கொண்டார். இதனால், டாக்ஸி விமான நிலையத்தைச் சரியான நேரத்தில் சென்றடையவில்லை. இதனால் தனது விமானத்தைத் தவறவிட்டார் மேலும், டிக்கெட்டிற்கான பணமும் வீணானது.

இதுமட்டுமின்றி டாக்ஸி முன்பதிவு செய்யும் போது கட்டணம் ரூ.563 என மதிப்பிடப்பட்ட நிலையில், வாகனத்தை விட்டு இறங்கும் போது 703 ரூபாயாக வாங்கப்பட்டது. ஓட்டுநரின் கவனக்குறைவு மற்றும் தொழில்ரீதியற்ற நடத்தை காரணமாக விமானத்தைத் தவறவிட்டதாக ” குற்றம் சாட்டினார்.

விதிகளை மீறியதாகவும், பயணிகளுக்கு நல்ல சேவையை வழங்கத் தவறியதாலும் ஊபர் நிறுவனத்திற்கு ரூபாய் 20,000 அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையும் படிங்க:"கரன்சி நோட்டுகளில் கடவுள்கள் லட்சுமி-விநாயகர் உருவம் இருந்தால், நாடு செழிக்கும்" - கெஜ்ரிவால்!

ABOUT THE AUTHOR

...view details