புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பது குறித்து நேற்று (ஆகஸ்ட் 23) அம்மாநில சட்டப்பேரவை அலுவலகத்தில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பேசிய அவர், 'செப்டம்பர் 1ஆம் தேதிமுதல் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படும்' எனத் தெரிவித்தார்.
புதுச்சேரி பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் பி.டி. ருத்ரகௌடு இன்று (ஆகஸ்ட் 24) பேசியபோது, அனைத்துப் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என்றார். அந்தச் சுற்றறிக்கையில், "தலைமையாசிரியா்கள் பள்ளிகள் திறப்பு தொடர்பாக பெற்றோர், ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மைக் குழுக்களின் கூட்டத்தை ஆகஸ்ட் 25ஆம் தேதி நடத்த வேண்டும்.
- கூட்டத்தில் பங்கேற்ற பெற்றோா்களின் எண்ணிக்கை,
- பள்ளிகளை மீண்டும் திறக்க விரும்புவோா் எத்தனை போ்,
- 9ஆம் வகுப்புமுதல் 12ஆம் வகுப்புவரை அல்லது 6ஆம் வகுப்புமுதல் 12ஆம் வகுப்புவரை அல்லது 1ஆம் வகுப்புமுதல் 12ஆம் வகுப்புவரை திறக்கலாமா? அரை நாள் அல்லது முழு நாள் வகுப்புகளை செயல்படுத்தலாமா? ஆகிய கேள்விகளுக்கும், பள்ளிகள் மறு திறப்பு தொடா்பாகவும் பெற்றோர்களின் கருத்துகளைச் சேகரிக்க வேண்டும்.