தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நாடாளுமன்ற புதிய கட்டடத்தின் கட்டுமானப் பணிகள் இன்று தொடக்கம்! - நாடாளுமன்ற புதிய கட்டடத்தின் கட்டுமான பணிகள்

டெல்லி: நாடாளுமன்ற புதிய கட்டடத்தின் கட்டுமானப் பணிகள் இன்று தொடங்க உள்ளன.

Construction of new parliament building to begin tomorrow
Construction of new parliament building to begin tomorrow

By

Published : Jan 15, 2021, 10:46 AM IST

இந்திய நாடாளுமன்றத்தின் தற்போதைய கட்டடம் ஏறத்தாழ நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தது. நாட்டின் வரலாற்று சின்னங்களுள் ஒன்றாக அறியப்படும் இக்கட்டடத்தினை இடிக்காமல், அதன் அருகே நாடாளுமன்ற புதிய கட்டடம் கட்ட நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு திட்டமிட்டது.

இதற்காக சென்ட்ரல் விஸ்டா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின்படி 65,000 சதுர மீட்டர் பரப்பளவில் புதிய நாடாளுமன்றம் கட்டப்பட உள்ளது. தரைத்தளம் மட்டும் 16,921 சதுரகிலோ மீட்டர் பரப்பளவில் கட்டப்பட உள்ளது. முக்கோண வடிவில் கட்டப்படவுள்ள இக்கட்டடத்தின் திட்டப் பணிகளுக்கான மதிப்பு ரூ.889 கோடியாகும்.

இந்நிலையில் இன்று நாடாளுமன்ற புதிய கட்டடத்தின் கட்டுமானப் பணிகள் இன்று(ஜன 15) தொடங்க உள்ளன. புதிய நாடாளுமன்ற கட்டடத்தில், 900 முதல் 1,200 எம்.பி.க்கள் வரை அமரலாம். இந்தக் கட்டடம் 2022ஆகஸ்ட் மாதத்துக்குள் கட்டப்பட உள்ளது.

இது குறித்து வீட்டுவசதி மற்றும் நகர விவகாரத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறுகையில், 'நாடாளுமன்றத்தின் புதிய கட்டடம் கட்டப்படுவதால் பழைய கட்டடத்திற்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாது' என்றார்.

இதையும் படிங்க...நாடாளுமன்ற புதிய கட்டடத்தின் மாதிரி காணொலி

ABOUT THE AUTHOR

...view details