தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்தியாவில் திருப்பதி தேவஸ்தானம் கட்டும் கோயில்களின் கட்டுமானப் பணிகள் தீவிரம் - திருப்பதி தேவஸ்தான தலைவர் ஒய் வி சுப்பா ரெட்டி

இந்தியா முழுவதும் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கட்டப்பட்டு வரும் 500 கோயில்கள், ஒரு ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் ஒய்.வி.சுப்பா ரெட்டி தெரிவித்துள்ளார்.

ஒய்.வி.சுப்பா ரெட்டி
ஒய்.வி.சுப்பா ரெட்டி

By

Published : Jun 20, 2021, 2:15 PM IST

திருப்பதி: இந்தியா முழுவதும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கட்டப்படும் கோயில்களின் கட்டுமானத்தை விரைவுபடுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பதி தேவஸ்தான தலைவர் ஒய்.வி.சுப்பா ரெட்டி, இரண்டு ஆண்டுகள் பதவியில் இருப்பதைக் குறிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது அவர் பேசுகையில், ”ஒரு ஆண்டுக்குள் 500 கோயில்கள் கட்டப்படும். ஜம்மு முதல் கன்னியாகுமரி வரை பகவான் பாலாஜி கோயில்கள் கட்டப்பட்டு வருகின்றன. ஜம்முவில் உள்ள மஜின் கிராம பகுதியில், ஒரு கோயிலுக்கு அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது.

சமர்சாதா அறக்கட்டளை, எண்டோவ்மென்ட் துறை மூலம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே திட்டங்கள் தயார் செய்யப்பட்டும், தொற்றுநோய் காரணமாக செயல்படுத்தப்படவில்லை.

ஸ்ரீவானி அறக்கட்டளை நிதி, பின்தங்கிய பகுதிகளில் கோயில்களை நிர்மாணிக்க, புதுப்பிக்க பயன்படுத்தப்படும். ஒழுங்குபடுத்தலுக்காக பணியாளர்கள் ஒப்பந்தம், அவுட்சோர்சிங்கிற்கான தகுதி ஆகியவை குறித்து ஆராய குழு ஒன்று அமைக்கப்படும். கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் எஸ்.வி.பி.சி ஆன்மீக தொலைக்காட்சி சேனல்கள் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் தொடங்கப்படும்.

திருமலையில் அங்கீகரிக்கப்படாத கடைகளை அகற்றி, 13 திருமண அரங்குகள், திருப்பதியில் குழந்தைகள் மருத்துவமனை ஆகியவை கட்டப்படும். இயற்கை வேளாண்மையை அதிகரித்து, இயற்கை வேளாண் பயிர்கள் தள்ளுபடி விலையில் விற்க வழிவகை செய்யப்படும். 'குடிகோ கோமாட்டா' திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள 100 கோயில்களுக்கு மாடுகள் நன்கொடையாக அளிக்கப்பட்டுள்ளன” என்றார்.

இதையும் படிங்க : டெல்லிக்கு மாம்பழங்கள் ஏற்றிக் கொண்டு புறப்பட்ட ’கிசான் ரயில்’

ABOUT THE AUTHOR

...view details