ஆந்திரா மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் மதுபான கடை உரிமையாளர், மதுபான விற்பனையிலிருந்து வந்த வருமானமான எட்டு லட்சம் ரூபாயை காவல் நிலையத்தில் வைத்திருந்தார். வங்கிகள் தொடர்ந்து மூன்று நாள்கள் விடுமுறையிலிருந்ததால் பணத்தைப் பிறகு பெற்றுக்கொள்கிறேன் என்று கூறி காவல் நிலையத்தில் வைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து மீண்டும் அவர் தனது பணத்தை எடுக்க காவல் நிலையத்திற்குச் சென்றபோது தான் வைத்திருந்த பெட்டியில் பணம் காணாமல்போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். தொடர்ந்து இது குறித்து சிசிடிவியை காவல் துறையினர் ஆய்வு செய்தபோதுதான் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.