ஹைதராபாத் : 15 வயது மைனர் பெண் ஒருவர் 26 வயதான உறவினர் ஒருவரால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டார். இதனால் சிறுமி கர்ப்பம் தரித்தார்.
தெலங்கானா மாநிலம் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் குடும்பத்துடன் வசித்துவந்தார். இங்கு சில மாதங்களுக்கு முன்பு கம்மம் பகுதியை சேர்ந்த இவர்களது உறவினராக 26 வயது இளைஞர் ஒருவர் வந்தார். ஏற்கனவே திருமணமாகி அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.
இந்த நிலையில் வீட்டில் சிறுமி தனியாக இருந்தபோது அவரை பலவந்தமாக மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இந்தக் கொடுமையை வெளியில் கூறினால், உன்னையும் உன் பெற்றோரையும் கொன்றுவிடுவேன் எனக் கூறி தொடர்ச்சியாக பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுவந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் பாலியல் தொல்லை அத்துமீறவே சிறுமி தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்து பெற்றோரிடம் கூறினார். இதைக் கேட்டு அதிர்ந்த அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்நிலையில் சிறுமி கர்ப்பம் தரித்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து மாணவியின் கர்ப்பத்தை கலைக்க நிலோஃபர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் மருத்துவமனையில் சிறுமியின் கர்ப்பத்தை கலைக்க மறுப்பு தெரிவித்துவிட்டனர்.
இது தொடர்பான வழக்கை விசாரித்த தெலங்கானா உயர் நீதிமன்ற நீதிபதி, “15 வயதான சிறுமி கண்ணியத்துடன் வாழ வேண்டும் என்பதில் இந்த நீதிமன்றம் உறுதியாக உள்ளது. சிறுமியின் தேவையற்ற கர்ப்பத்தால் அவருக்கு உடல் மற்றும் மன ரீதியாக பல்வேறு பாதிப்புகளை அடைந்துள்ளார்.
ஆகவே மருத்துவமனை இதில் உடனடியாக தலையிட்டு சிறுமியின் கர்ப்பத்தை கலைக்க வேண்டும். இந்த விவகாரத்தில் மருத்துவமனை தாமதிக்கக் கூடாது” என்றார்.
தொடர்ந்து, “மைனர் பெண் விருப்பத்துடன் செக்ஸ் வைத்துக் கொண்டாலும் அது பாலியல் வன்புணர்வு ஆகவே கருதப்படும்” என்றார். தொடர்ந்து சிறுமியிடம் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட 26 வயது இளைஞர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தீர்ப்பளித்தார்.
இதையும் படிங்க :17 வயது மைனர் பெண்.. பாலியல் வன்புணர்வு.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு