புது டெல்லி: சிறையில் அடைக்கப்பட்ட மோசடி குற்றவாளி சுகேஷ் சந்திரசேகர், டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலிடம் பல கேள்விகளை எழுப்பி கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘நான் நாட்டின் பெரும் பயங்கரவாதி என்றால் எதன் அடிப்படையில் நீங்கள் என்னிடம் 50 கோடி ரூபாயை வாங்கி எனக்கு ராஜ்ய சபா சீட் தருவதாக சொன்னீர்கள்...?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், கெஜ்ரிவால் குறித்தும் ஆம் ஆத்மியின் பிற தலைவர்களான கைலாஷ் கெஹ்லோட் மற்றும் சத்யேந்திர ஜெயின் ஆகியோர் மீதும் டெல்லி ஆளுநரிடம் தான் புகார் அளித்துள்ளதாகவும் சுகேஷ் தெரிவித்துள்ளார். மேலும், அந்தக் கடிதத்தில் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலிடம் சில கேள்விகளை எழுப்பியுள்ளார்.
அதில், “2016ஆம் ஆண்டு நீங்கள் ஏன் என்னை தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் சீட்களுக்கும், பொறுப்புகளுக்கும் சுமார் 30 நபர்களை 500 கோடி ரூபாய் கட்சிக்கு வழங்கும் படி செய்யச் சொன்னீர்கள்..?. ஏன் நீங்கள் ஜெயினுடன் ஹயாட்டில் நடந்த எனது இரவு விருந்தில் கலந்து கொண்டீர்கள்? அசோலாவிலுள்ள கெஹ்லோட்டின் பண்ணை வீட்டில் வைத்து நான் தந்த 50 கோடி ரூபாயை ஏன் பெற்றுக்கொண்டீர்கள்?