தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'தமிழ்நாட்டில் திமுக, காங்கிரஸ் கூட்டணி வெல்லும்'- தினேஷ் குண்டுராவ் - திமுக, காங்கிரஸ் கூட்டணி

பிகாரில் காங்கிரஸ் கூட்டணி தோல்வி அடைந்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் திமுக, காங்கிரஸ் கூட்டணி வெல்லும் என தமிழ்நாடு காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார்.

M.K. Stalin Congress would work to make DMK president M.K. Stalin the Chief Minister Dinesh Gundu Rao தினேஷ் குண்டுராவ் திமுக, காங்கிரஸ் கூட்டணி பிகார்
M.K. Stalin Congress would work to make DMK president M.K. Stalin the Chief Minister Dinesh Gundu Rao தினேஷ் குண்டுராவ் திமுக, காங்கிரஸ் கூட்டணி பிகார்

By

Published : Nov 17, 2020, 10:43 AM IST

Updated : Nov 17, 2020, 11:32 AM IST

காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் பிரபல ஆங்கில நாளேட்டுக்கு அளித்துள்ள பேட்டியில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை முதலமைச்சராக காங்கிரஸ் உழைக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், பிகார் முடிவுகள் தமிழ்நாட்டில் பாதிப்பை ஏற்படுத்தாது. திமுகவுடன் இணக்கமாக உள்ளோம். கூட்டணியில் எதார்த்தமான முடிவை எடுப்போம். நாங்கள் வலுவாக இருக்கும் இடங்களை கண்டறியும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. எங்களிடம் நல்ல வேட்பாளர்கள் உள்ளனர். அவர்கள் கூட்டணிக்கு வெற்றியை தேடிதருவார்கள்.

பிகாரை பொறுத்தமட்டில் மக்களவை தேர்தலில் மதசார்பற்ற கூட்டணி தோல்வியை தழுவியது. ஆனால் தமிழ்நாட்டில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். தொகுதி பங்கீடு யதார்த்தமாக இருக்கும். கடந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி ஆட்சி அமைக்கும் வெற்றி வாய்ப்பை அருகில் வந்து தவறவிட்டது. எனினும் இம்முறை மக்களவை தேர்தலில் வென்றதுபோல், வரும் சட்டப்பேரவை தேர்தலையும் திமுக, காங்கிரஸ் கூட்டணி வெல்லும்” என்றார்.

மேலும், “மக்களவை தேர்தலில் ராகுல் காந்தி பிரதமராக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஆதரவு அளித்தார். ஆகவே மு.க. ஸ்டாலின் முதலமைச்சராக காங்கிரஸ் உழைக்கும்” என்றார்.

இந்தப் பேட்டியை ட்விட்டரில் பகிர்ந்துள்ள தினேஷ் குண்டுராவ், “தமிழ்நாட்டில், 2019 மக்களவை தேர்தலை வென்றதுபோன்று, சட்டப்பேரவை தேர்தலிலும் வெல்வோம்” என ட்வீட் செய்துள்ளார்.

இதையும் படிங்க: 'பிகார் அரசு மே.வங்க தேர்தல் வரை நீடிக்கும்'- பூபேஷ் பாகல்

Last Updated : Nov 17, 2020, 11:32 AM IST

ABOUT THE AUTHOR

...view details