தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர் அருகே கருப்பு பலூன் சென்றதால் பரபரப்பு! - ஆந்திராவில் பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு

ஆந்திராவில் பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் கருப்பு பலூன்கள் பறக்கவிட்டனர். அவை பிரதமர் சென்ற ஹெலிகாப்டர் அருகே சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர் அருகே கருப்பு பலூன் பறக்கவிட்டதால் பரபரப்பு
பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர் அருகே கருப்பு பலூன் பறக்கவிட்டதால் பரபரப்பு

By

Published : Jul 4, 2022, 7:00 PM IST

Updated : Jul 4, 2022, 8:07 PM IST

ஆந்திர பிரதேசம்:பிரதமர் நரேந்திர மோடி விடுதலைப் பேராட்ட வீரர் அல்லூரி சீதாராம ராஜுவின் 125ஆவது பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ள ஆந்திர மாநிலம் பீமாவரத்திற்கு இன்று (ஜூலை 4) வருகை தந்தார். அங்கு அல்லூரி சீதாராம ராஜுவின் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

முன்னதாக, ஆந்திராவுக்கு அளித்த வாக்குறுதிகளை ஒன்றிய அரசு நிறைவேற்றவில்லை எனக் கூறி பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கன்னவரம் விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி நிகழ்ச்சி இடத்திற்கு சென்ற போது, வானில் கருப்பு பலூன் பறக்கவிட்டப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர் அருகே கருப்பு பலூன் பறக்கவிட்டதால் பரபரப்பு

இதையடுத்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிலரை கன்னவரம் காவல்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: வீடியோ: விபத்தில் சிக்கியவருக்கு உதவிய ராகுல் காந்தி

Last Updated : Jul 4, 2022, 8:07 PM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details