தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

செப்.14 இல் காங்கிரஸ் முக்கிய ஆலோசனை

பாஜக அரசின் கொள்கைகளை எதிர்கொள்வது குறித்து செப்டம்பர் 14ஆம் தேதி காங்கிரஸ் கட்சி சார்பில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

Congress
Congress

By

Published : Sep 10, 2021, 4:32 PM IST

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசின் முக்கிய கொள்கை முடிவுகளை எதிர்கொண்டு அதன் தவறுகளை மக்களிடம் கொண்டு சேர்க்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குழு ஒன்றை அமைத்துள்ளார். குறிப்பாக, பாஜக அரசு வெளியிட்டுள்ள தேசிய பணமாக்கல் திட்டத்தை காங்கிரஸ் கடுமையாக எதிர்த்து வருகிறது.

தவறான நடவடிக்கைகளால் நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்த பாஜக அரசு தற்போது இந்தியாவை விற்க தயாராகி வருகிறது எனவும். 1947 முதல் 2014ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் அரசால் உருவாக்கப்பட்ட நாட்டின் அனைத்து சொத்துக்களையும் பாஜக அரசு விற்க திட்டம் தீட்டியுள்ளது என காங்கிரஸ் கடுமையாக சாடியுள்ளது.

இந்நிலையில், பாஜக அரசின் கொள்கை முடிவை எதிர்கொள்ள மூத்த தலைவர் திக் விஜய சிங் தலைமையில் காங்கிரஸ் குழு அமைத்துள்ளது. இதில் பிரியங்கா காந்தி உறுப்பினராக உள்ளார். இந்த குழுவின் முதல் கூட்டம் செப்டெம்பர் 14ஆம் தேதி நடைபெறும் என காங்கிரஸ் காரிய கமிட்டி அறிவித்துள்ளது.

இதையும் படிங்க:திருச்சி உள்ளிட்ட 13 விமான நிலையங்களை தனியார்மயமாக்க அரசு ஒப்புதல்

ABOUT THE AUTHOR

...view details