தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ராகுல்காந்தி விவகாரம் - பாஜக அரசை கண்டித்து நாடு தழுவிய போராட்டம் நடத்த காங்கிரஸ் திட்டம்! - மோடியை விமர்சித்த வழக்கு

ராகுல்காந்திக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டு, அவரது எம்பி பதவி பறிக்கப்பட்ட நிலையில், மத்திய பாஜக அரசை கண்டித்து வரும் 27ஆம் தேதி முதல் நாடு தழுவிய போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது.

Congress
ராகுல்

By

Published : Mar 24, 2023, 8:37 PM IST

டெல்லி:ராகுல்காந்தி கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் பேசியபோது, பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்துப் பேசியிருந்தார். எல்லா திருடர்களின் பெயர்களும் மோடி என்றே முடிவதாக விமர்சித்திருந்தார். ராகுல்காந்தியின் இந்த பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்த பாஜகவினர் இது தொடர்பாக சூரத் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் நேற்று(மார்ச்.23), ராகுல்காந்தி குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது. அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. இதன் காரணமாக ராகுல்காந்தி எம்பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். ராகுல்காந்தி மீதான இந்த நடவடிக்கை மத்திய பாஜக அரசு அரசியல் பழிவாங்கும் செயல் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், மகாராஷ்ட்ரா முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், திமுக எம்பி கனிமொழி உள்ளிட்ட பலரும் பாஜகவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். அதானி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் தொடர்ந்து பேசியதன் காரணமாகவே மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும், இது எதிர்க்கட்சிகளின் குரலை நசுக்குவதற்கான முயற்சி என்றும் குற்றம் சாட்டினர்.

இந்த பிரச்சினையை சட்ட ரீதியாக எதிர்கொள்ள காங்கிரஸ் கட்சி தயாராகி வருகிறது. இந்த நிலையில், ராகுல்காந்தி மீது பழிவாங்கும் நடவடிக்கை எடுத்த மத்திய பாஜக அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நாடு தழுவிய போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். வரும் 27ஆம் தேதி முதல் நாட்டின் முக்கிய நகரங்களில் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: ராகுல் காந்தியின் பதவி பறிப்பு.. எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம்..

ABOUT THE AUTHOR

...view details