தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 9, 2022, 10:47 AM IST

ETV Bharat / bharat

தேர்தல் முடிவுக்கு முன்னதாக வேட்பாளர்களை பாதுகாக்க காங்கிரஸ் தீவிரம்

ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ள நிலையில், தனது கட்சி வேட்பாளர்களை பாதுகாக்கும் பணியில் மணிப்பூர் காங்கிரஸ் கட்சி தீவிரப்படுத்தியுள்ளது.

Congress
Congress

உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றுள்ள நிலையில், நாளை வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்டவுள்ளன. இந்நிலையில் தேர்தல் முடிவுக்கு முன்னதாக வேட்பாளர்கள் கட்சி தாவலை தடுக்க காங்கிரஸ் இப்போதே செயலாற்ற தொடங்கியுள்ளது.

மணிப்பூர் மாநிலத்திற்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவர்கள் வரத்தொடங்கியுள்ளனர். தேர்தல் முடிவுகளில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் ஆளும் பாஜக மணிப்பூர் காங்கிரஸ் வேட்பாளர்களை தனது கட்சிக்கு இழுக்க முயற்சி செய்யும். இதை தடுக்கும் விதமாகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காங்கிரஸ் தற்போது வேட்பாளர்களை ஒரே இடத்தில் திரட்டி பாதுகாப்பாக வைத்துள்ளது.

கடந்தாண்டு நடைபெற்ற அசாம் மாநில சட்டப்பேரவைத் தேர்தலிலும் காங்கிரஸ் இதே யுக்தியை தான் பயன்படுத்தியது. அசாம் வேட்பாளர்களை காங்கிரஸ் மேலிடம் ராஜஸ்தானில் பாதுகாப்பாக தங்கவைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. மணிப்பூர் மாநிலத்தில் 60 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தகுதிகள் நாளை வெளியாகவுள்ளது. தொடர்ந்து 15 ஆண்டுகாலம் ஆட்சியிலிருந்த காங்கிரஸ், 2017ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவிடம் ஆட்சியை இழந்தது.

இதையும் படிங்க:மக்களவைத் தேர்தலில் களமிறங்குகிறாரா பிரியங்கா காந்தியின் கணவர்? - இடிவி பாரத்திற்கு பிரத்தியேகப் பேட்டி

ABOUT THE AUTHOR

...view details