பொருளாதார வளர்ச்சிப் பாதைக்கு இந்தியா திரும்பிக் கொண்டிருந்த நிலையில் கரோனாவால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக இந்தியாவில் பொருளாதார நடவடிக்கைகள் முற்றிலும் முடங்கிப் போயுள்ளன. தொழில்கள், வர்த்தகம், சிறு, குறு நிறுவனங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இதன் காரணமாக நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் மைனஸ் 23.96 விழுக்காடு வீழ்ச்சியடைந்தது.
தலைப்புச் செய்தியில் இடம் பெற முயற்சிக்கும் பாஜக - காங்கிரஸ் விமர்சனம் - காங்கிரஸ் விமர்சனம்
டெல்லி: இந்தாண்டின் இரண்டாம் காலாண்டில் உள்நாட்டு மொத்த உற்பத்தி 8.6 விழுக்காடு குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ள நிலையில், தலைப்புச் செய்தியில் இடம் பெறவே பாஜக முயற்சித்து வருவதாக காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது.
ஜூலை-செப்டம்பர் காலாண்டில் நாட்டின் மொத்த பொருளாதார வளர்ச்சி 8.6 விழுக்காடாகக் குறைய வாய்ப்புள்ளது. அதாவது வரலாற்றில் இந்தியப் பொருளாதாரம் முதல் முறையாக மந்தநிலைக்குள் செல்ல வாய்ப்புள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்நிலையில், பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையிலான மூன்றாவது ஊக்க திட்டத்தை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். இதனை விமர்சித்துள்ள காங்கிரஸ், தலைப்புச் செய்தியில் இடம் பெறவே பாஜக முயற்சிக்கிறது என தெரிவித்துள்ளது.
வீடியோ கான்பரன்சிங் மூலம் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம், "சுதந்திர இந்திய வரலாற்றில் முதல் முறையாக இந்திய பொருளாதாரம் மந்தநிலைக்கு சென்றுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்தாண்டின் இரண்டாம் காலாண்டில் உள்நாட்டு மொத்த உற்பத்தி 8.6 விழுக்காடு குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ஒரே ஆண்டின் இரண்டு தொடர்ச்சியான காலாண்டில் நெகட்டிவ் வளர்ச்சி அடைந்தால் அதுவே மந்த நிலையாகும். 2019-20 நிதி ஆண்டின் முதல் காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி 5.2 விழுக்காடாக இருந்தது. இதனை சரி செய்யாமல் பாஜக தலைப்புச்செய்திகளில் இடம் பெறவே முயற்சிக்கிறது" என்றார்.