தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நடைபயணத்தில் இணைந்த சோனியா காந்தி - CONGRESS SONIA GANDHI JOINED BHARAT JODO YATRA

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தியுடன் பாரத் ஜோடோ நடைபயணத்தில் இன்று கலந்துகொண்டார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Oct 6, 2022, 11:33 AM IST

கர்நாடகா(மாண்டியா): நாடு முழுவதும் "தேச ஒற்றுமை நடைப்பயணம்" (Bharat Jodo Yatra) மேற்கொண்டு வரும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இன்று (அக்.6) கர்நாடக மாநிலம் சென்றடைந்தார். அவருடன் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய சோனியா காந்தியும் பங்கேற்றுள்ளார்.

வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய பிறகு ஓய்விலிருந்த சோனியா காந்தி, இன்று மண்டியா மாவட்டம் பாண்டவபுராவில் இருந்து ராகுல்காந்தியுடன் "பாரத் ஜோடோ" தேச ஒற்றுமை நடைப்பயணத்தில் பங்கேற்று நடைபயணம் மேற்கொண்டார். முன்னதாக, தமிழ்நாட்டில் கன்னியாகுமரியில் தமிழ்நாடு முதலமைச்சர் முன்னிலையில் தொடங்கிய இந்நடைப்பயணம் தற்போது தமிழ்நாடு, கேரளாவிற்கு அடுத்தபடியாக கர்நாடகாவை எட்டியுள்ளது.

முன்னதாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சில ஆண்டுகளாக தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்த சோனியா காந்தியின் இந்நடைப்பயணம் காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களின் கவனத்தைப் பெற்று வருகிறது.

இதையும் படிங்க: எந்த சக்தியாலும் தடுக்க முடியாது - கொட்டும் மழையில் ராகுல் காந்தி உரை

ABOUT THE AUTHOR

...view details