கேரளாவில் வரும் ஏப்ரல் ஆறாம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி நெருங்கிவர அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பரப்புரை மேற்கொண்டுவருகின்றன.
ஆளும் இடதுசாரி கூட்டணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான யூ.டி.எஃப். கூட்டணிக்கும் நேரடி மோதல் நிலவிவரும் நிலையில், பாஜகவும் தீவிரமாகக் களத்தில் முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது.
இந்நிலையில், காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரண்தீப் சிங் சுர்ஜேவாலா இடதுசாரி அரசு மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இது குறித்து அவர், "ஆளும் பினராயி விஜயனுக்கும், மத்தியில் ஆளும் மோடிக்கும், தொழிலதிபர் அதானிக்கும் இடையே ரகசிய உடன்படிக்கை உள்ளது. அதானி குழுமத்திற்கு ரூ.8,785 கோடிக்கு காற்றாலை ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.