தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஆளுநர் மாளிகை முன்பு காங். போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு: கிரண்பேடி Vs நாராயணசாமி

புதுச்சேரி: ஆளுநர் மாளிகை முன்பு காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் போராட்டம் நடத்துவதற்கு காவல் துறை அனுமதி மறுத்துள்ளது.

கிரண்பேடி Vs நாராயணசாமி
கிரண்பேடி Vs நாராயணசாமி

By

Published : Jan 7, 2021, 5:25 PM IST

ஆளுநர் மாளிகை (ராஜ் நிவாஸ்) முன்பு காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் (மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி) போராட்டம் நடத்துவதற்கு காவல் துறை மறுத்துள்ளது, அண்ணா சாலை அருகே போராட்டத்திற்கு அனுமதி அளித்துள்ளது.

புதுச்சேரியில் மக்கள் நலத்திட்டங்கள் வளர்ச்சித் திட்டங்களுக்கு ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளிக்காமல் மாநில வளர்ச்சியைத் தடுத்துவருவதாகவும் அவரை மாற்றக்கோரி நாளை (ஜன. 08) காங்கிரஸ் கட்சி சார்பில் ஆளுநர் மாளிகை முன்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்து. ஆனால் அப்போராட்டத்திற்கு காவல் துறையினர் அனுமதி மறுத்துள்ளனர்.

144 தடை உத்தரவு: குவிக்கப்பட்ட பாதுகாப்புப் படை

இதைத்தொடர்ந்து, ஆளுநர் மாளிகை, தலைமைச் செயலகம், சட்டப்பேரவை, அரசு அலுவலகங்களிலிருந்து 500 மீட்டர் சுற்றளவுக்குள் போராட்டம் நடத்தக் கூடாது எனக்கூறி 144 தடை உத்தரவினை மாவட்ட ஆட்சியர் பூர்வா கார்க் பிறப்பித்துள்ளார்.

இதற்கிடையே இன்று (ஜன. 07) புதுச்சேரி காங்கிரஸ் கட்சித் தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கிரண்பேடியை மாற்றக்கோரி போராட்டம். நாளை (ஜன. 08) முதல் ஜனவரி 11 வரை, தொடர்ந்து நான்கு நாள்களுக்கு, புதுச்சேரியின் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பாக, கடந்த சில நாள்களாகத் திட்டமிட்டு, அதற்கான தெருமுனை பரப்புரைகளை சிறப்பாகச் செய்து முடித்து, ஒரு மிகப்பெரிய போராட்டத்தை, அண்ணா சிலைக்கும் வெங்கடசுப்பா ரெட்டியார் சிலைக்கும் இடையில் உள்ள மறைமலை அடிகளார் சாலையில் நாளை நடைபெறவுள்ளது.

காங்கிரஸ் கட்சித் தலைவர் ஏ.வி. ஏ.வி.சுப்பிரமணியன்

ராஜ்நிவாசில் (ஆளுநர் மாளிகையில்) ஒரு போட்டி அரசாங்கம் நடத்துகின்ற, புதுவை மக்களின் விருப்பத்திற்கு எதிராகச் செயல்படுகின்ற, ஜனநாயக விரோதி கிரண்பேடியின் அட்டூழியங்களை எதிர்ப்பதற்காக, நம்மோடு சேர்ந்து, இந்தப் பெரிய போராட்டத்திற்குத் தொடர்ந்து ஆதரவளித்தும், சிறப்பாகச் செயலாற்றியும் வருகின்ற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின், புதுச்சேரி மாநில நிர்வாகிகளுக்கு நாம் பாராட்டுதல்களையும் நன்றியினையும் தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறோம்.

எனவே தாங்கள், நாளை முதல் நடக்க இருக்கின்ற நமது மாபெரும் போராட்டத்தில் பங்கு கொள்ள தாங்கள் அணிதிரண்டு வந்து இந்தப் போராட்டத்தை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும், தொடர் போராட்டம் என அறிவித்த காங்கிரஸ் கட்சி தற்போது நான்கு நாள்களுக்கு மட்டும் நடத்தப்படும் என ஏ.வி. சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, போராட்டத்திற்கு அனுமதி வேண்டி காங்கிரஸ் கட்சி சார்பில் அக்கட்சியின் தலைவர் மாவட்ட ஆட்சியர், டிஜிபி ஆகியோருக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.

சாலையில் தடுப்புக் கட்டைகள் அமைத்து பாதுகாப்புப் பணி

இந்நிலையில், பாதுகாப்பிற்காக புதுச்சேரி வந்துள்ள 3 கம்பெனி மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர், ஆளுநர் மாளிகை முதல் அரவிந்தர் ஆசிரமம் அருகே வரை தலைமைச் செயலகம் செல்லும் சாலையில் தடுப்புக் கட்டைகள் அமைத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க:அமெரிக்க அதிபராக ஜோ பைடன் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details