தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கரோனா - Congress president Sonia Gandhi tests positive for COVID

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கோவிட் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கரோனா
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கரோனா

By

Published : Jun 2, 2022, 1:49 PM IST

டெல்லி:காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இது குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் சுர்ஜேவாலா வெளியிட்டுள்ள தகவலில், சோனியாவிற்கு காய்ச்சல் மற்றும் சளி இருந்ததால் பரி சோதனை செய்து கொண்டார்.

இதனையடுத்து அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சோனியா காந்தி தனிமைப் படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து, அவர் விரைவில் குணமடைவார் என நம்பிக்கை தெரிவித்தார்.

அமலாக்கத் துறையின் விசாரணைக்கு செல்வதற்காக மீண்டும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நேற்று (ஜூன்1) சோனியாவிற்கு அமலாக்கத் துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.

இதையும் படிங்க:ஜம்மூ-காஷ்மீரில் தொடரும் துப்பாக்கிச்சூடு- வங்கி மேலாளர் சுட்டுக் கொலை

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details