தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

Karnataka CM: கர்நாடக முதலமைச்சர் யார்? மல்லிகார்ஜூன கார்கேவிடம் பொறுப்பு ஒப்படைப்பு! - DK sivakumar

கர்நாடக முதலமைச்சரை தேர்வு செய்யும் முடிவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் ஒப்படைக்க காங்கிரஸ் சட்டமன்றக் குழு முடிவு செய்து உள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : May 14, 2023, 8:58 PM IST

Updated : May 15, 2023, 6:16 AM IST

பெங்களூரூ : காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் முடிவை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவரிடமே விட்டுவிட காங்கிரஸ் சட்டமன்றக் குழு ஒருமனதாக முடிவு செய்துள்ளது.

224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டப் பேரவைக்கு கடந்த மே 10ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. நேற்று (மே. 13) தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் 135 இடங்களைக் கைப்பற்றி காங்கிரஸ் கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது.

காங்கிரஸ் கட்சியில் அடுத்த முதலமைச்சரை தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்றது. அதற்காக வெற்றி பெற்ற அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் பெங்களூருவில் முகாமிட்டனர். அடுத்த முதலமைச்சருக்கான ரேஸில் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, காங்கிரஸ் மாநிலத் தலைவர் டி.கே. சிவகுமார் இடையே கடும் போட்டி நிலவியதாக கூறப்பட்டது.

ஏற்கனவே தனது தந்தை தான் அடுத்த முதலமைச்சராக பதவியேற்பார் என சித்தராமையாவின் மகன் யதிந்திரா தெரிவித்து இருந்தார். இது டி.கே.சிவகுமார் ஆதரவாளர்களிடையே கூடுதல் சலசலப்பை ஏற்படுத்தியது. சித்தராமையா முதலமைச்சராக வேண்டுமென்று அவரது ஆதரவாளர்களும், மறுபுறம் டி.கே. சிவகுமார் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட வேண்டுமென அவரது ஆதரவாளர்களும் மாநிலம் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டினர்.

பெங்களூருவில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் மாநில மற்றும் தேசிய அளவிலான காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு அடுத்த முதலமைச்சரை தேர்ந்தெடுப்பதற்கான ஆலோசனையில் ஈடுபட்டனர்.

முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, காங்கிரஸ் மாநிலத் தலைவர் டி.கே. சிவகுமார் போக, காங்கிரஸ் பிரசாரக்குழு தலைவர் எம்.பி.பாடீல், தேர்தல் அறிக்கை குழு தலைவர் ஜி.பரமேஸ்வர், மூத்த எம்.எல்.ஏக்கள் ஆர்.வி. தேஷ்பாண்டே, எச்.கே. பாடீல், முன்னாள் காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ், மூத்த லிங்காயத் சமூக தலைவர் சாமனூர் சிவசங்கரப்பா ஆகியோரும் முதலமைச்சர் வேட்பாளர் ரேஸில் உள்ளதாக கூறப்பட்டது.

பெரும்பாலும் சித்தராமையா - டி.கே. சிவகுமார் ஆகியோரிடையே கடும் போட்டி நிலவியதாக கூறப்பட்டது. இவர்கள் இருவரில் ஒருவரே அடுத்த முதலமைச்சராக தேர்வு செய்யப்படலாம் என்றும் அல்லது முதல் இரண்டு ஆண்டுகள் சித்தராமையா முதலமைச்சராக பதவி வகிப்பார் என்றும் அடுத்த மூன்று ஆண்டுகள் டி.கே. சிவகுமார் முதலமைச்சர் பதவி வகிக்கிலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

2028ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை டி.கே. சிவகுமார் தலைமையில் காங்கிரஸ் கட்சி எதிர்கொள்ள இந்த முடிவு எடுக்கபட்டதாக பல்வேறு வியூகங்கள் வேகமாக பரவின. அதேநேரம் வரி ஏய்ப்பு புகாரில் சிக்கி டி.கே. சிவகுமார் சிறை சென்று பின் ஜாமீனில் வெளிவந்த நிலையில், அவரை முதலமைச்சராக அறிவித்தால் மீண்டும் வழக்குகளை தூசி தட்டி மத்திய அரசு விசாரணையை துரிதப்படுத்தும் எனக் கூறப்படுவதால் அவருக்கு முதலமைச்சர் பதவி பின்தங்கிய நிலை ஏறப்ட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் முடிவை, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவரான மல்லிகார்ஜூன கார்கேவிடமே ஒப்படைக்க காங்கிரஸ் சட்டமன்றக் கட்சி கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அந்தக் கட்சியின் சட்டமன்ற குழு வெளியிட்டு உள்ளது,

இதையும் படிங்க :கர்நாடகாவைத் தொடர்ந்து மராட்டியத்திலும் பாஜகவுக்கு ஸ்கெட்ச் - மகா விகாஷ் அகாதி அவசர ஆலோசனை!

Last Updated : May 15, 2023, 6:16 AM IST

ABOUT THE AUTHOR

...view details