கடந்த 1984ஆம் ஆண்டு அக்டோபர் 31 அன்று, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவரது சொந்த பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த நிலையில் இன்று அவரது 38வது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி உள்பட காங்கிரஸ் மூத்த தலைவர்கள், இந்திரா காந்தியின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
மேலும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்தியாவின் முதல் பெண் பிரதமர் இந்திரா காந்திக்கு அவரது தியாக தினத்தில் எனது அஞ்சலி. விவசாயம், பொருளாதாரம் அல்லது ராணுவம் என எதுவாக இருந்தாலும் இந்தியாவை வலிமையான நாடாக மாற்றியதில் இந்திரா காந்தியின் பங்களிப்பு ஒப்பிட முடியாதது" என பதிவிட்டுள்ளார்.