குஜராத்: தேர்தல் பணிக்காகதந்தா காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் காந்தி ஹராடி, டான்டாவின் போர்டியாலா போம்தாரா பகுதியில் நேற்றிரவு (டிச. 4) காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது காரை நிறுத்திய அடையாளம் தெரியாத நபர்கள் அவரை தாக்கியுள்ளர். அங்கிருந்து அவர் செல்ல முயன்ற போது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது.
இந்த தாக்குதலில் அவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். தாக்குதல் சம்பவம் நடந்து 4 மணி நேரம் கழித்து போலீசார் விசாரணையை தொடங்கியதாக அக்கட்சியினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.