இந்தூர்(ம.பி): காங்கிரஸ் எம்எல்ஏ உமாங் சிங்கார், ரூ.10 கோடி பணம் கேட்டு தனது மனைவி மிரட்டுவதாக போலீசாரிடம் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப்பிரதேசத்தில் முந்தைய கமல்நாத் அரசில் முன்னாள் வனத்துறை அமைச்சராக இருந்த இவர், தற்போது கந்த்வானி தொகுதியில் காங்கிரஸ் எம்எல்ஏ-வாக உள்ளார். இந்நிலையில், இவர் 'தன்னிடம் ரூ.10 கோடி பணம் கேட்டு தனது மனைவி மிரட்டுகிறார்' என இன்று (நவ.21) போலீசாரிடம் புகார் செய்துள்ளார்.