தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

விவசாயிகளை தவறாக வழிநடத்தும் காங்கிரஸ்-அனுராக் தாக்கூர் குற்றச்சாட்டு

வேளாண் சட்டம் தொடர்பாக விவசாயிகளை காங்கிரஸ் தவறாக வழிநடத்துகிறதென்று மத்திய இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Anurag Thakur
அனுராக் தாக்கூர்

By

Published : Feb 10, 2021, 2:59 PM IST

மத்திய அரசு கொண்டுவந்த புதிய வேளாண் சட்டத்திற்கு எதிரான போராட்டம் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக நடைபெற்றுவருகிறது. குறிப்பாக, தலைநகர் டெல்லியின் எல்லையில் பஞ்சாப், ஹரியானா, மேற்கு உத்தரப் பிரதேச விவசாயிகள் முற்றுகை போராட்டம் நடத்திவருகின்றனர்.

விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தங்கள் குரலை தொடர்ச்சியாக எழுப்பிவருகின்றனர். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விவதாங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

வேளாண் சட்ட விவகாரம் தொடர்பாக மத்திய இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் காங்கிரஸ் கட்சியை சாடி மக்களவையில் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர், மண்டிகளை முற்றிலும் நீக்கிவிடுவோம் என சட்டத்தில் எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. தன்னுடைய அரசியல் சுயலாபத்திற்காக காங்கிரஸ் அவதூறுகளை பரப்பி விவசாயிகளை தவறான வழியில் கொண்டு செல்கிறது என குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதையும் படிங்க:பேரலையாகி வந்த வெள்ளம்; உத்தரகாண்ட் வெள்ள பாதிப்பின் வைரல் காணொலி

ABOUT THE AUTHOR

...view details