டெல்லி: 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலை கருத்தில்கொண்டு காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. பாஜகவுக்கு எதிராக அதானி குழும மோசடி விவகாரத்தை கையிலெடுத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்து வருகின்றன. எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்கும் வகையில் மத்திய ஏஜென்சிகளை ஏவி பாஜக பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு எதிராக, "காங்கிரஸ் ஃபைல்ஸ்" என்ற இணையப் பிரசாரத்தை பாஜக தொடங்கியுள்ளது. இதன் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பல்வேறு வீடியோக்களை தொடர்ச்சியாக வெளியிட இருக்கிறது. அந்த வகையில் காங்கிரஸ் ஃபைல்ஸ்-ல் முதல் வீடியோவை இன்று(ஏப்.2) பாஜக வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவை பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, இந்த முதல் எபிசோடில் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் நடந்த ஊழல்கள் பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த மூன்று நிமிட வீடியோவில், "70 ஆண்டுகள் கால காங்கிரஸ் ஆட்சியில் 48,20,69,00,00,000 ரூபாய் பொதுமக்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்டது. அந்தப் பணத்தை வைத்து நாட்டின் முன்னேற்றத்திற்காகப் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியிருக்கலாம்.