பெங்களூரு : கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவருமான எம். வீரப்ப மொய்லிக்கு கோவிட் அறிகுறிகள் தென்பட்டன.
இதையடுத்து அவர் மருத்துவர்கள் அறிவுறுத்தலின்பேரில் வீட்டில் தன்னைத் தானே தனிமைப்படுத்திக்கொண்டார். இதற்கிடையில் அவருக்கு காய்ச்சல் மற்றும் இருமல் பாதிப்புகள் அதிகரித்தன.
இந்நிலையில் வீரப்ப மொய்லிக்கு கோவிட் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இது குறித்து வீரப்ப மொய்லி ட்விட்டரில், “இன்று (அதாவது நேற்று ஜன.12) மாலை எனக்கு கரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டன. எனக்கு காய்ச்சல் மற்றும் இருமல் அறிகுறிகள் தென்பட்டன. தற்போது நான் வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ளேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை சோதித்துக் கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை திங்கள்கிழமை (ஜன.10) கரோனா வைரஸ் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டார். மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் வீட்டில் தனிமைப்படுத்தலில் உள்ள அவர் அங்கிருந்தப்படியே காணொலி வாயிலாக அரசு உயர் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : டெல்லியில் 24 மணி நேரத்தில் 27 ஆயிரம் பேருக்கு கரோனா!