தோஷா:காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நாடு தழுவிய இந்திய ஒற்றுமை யாத்திரையில் ஈடுபட்டுள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் கன்னியாகுமரியில் தொடங்கிய யாத்திரை 100-வது நாளை தாண்டி சென்று கொண்டு இருக்கிறது.
காங்கிரஸ் ஆட்சி செய்யும் ராஜஸ்தான் மாநிலத்தில் ராகுல் காந்தி யாத்திரை மேற்கொண்டுள்ளார். தோஷா மாவட்டத்தில் பாத யாத்திரை சென்ற ராகுல் காந்தி, திட்வானா பகுதியில் உள்ள விவசாயிகளிடம் கலந்துரையாடி அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.