டெல்லி:காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான இந்திய ஒற்றுமைய பயணத்தை மேற்கொண்டுள்ளார். பாதயாத்திரைக்கு நடுவே யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவரது வருங்கால மனைவி எப்படி இருக்க வேண்டும் என சுவாரஸ்ய தகவல்களை கூறியுள்ளார்.
இது குறித்து பேசுகையில் இந்திரா காந்தியை தனது இரண்டாம் தாய் எனக் கூறினார். இந்திரா காந்தி போன்ற ஒரு பெண்ணுடன் சேர்ந்து வாழ்வீர்களா என கேள்வி எழுப்பபட்டது. தொடர்ந்து பதிலளித்த ராகுல், "இது ஒரு சுவாரஸ்யமான கேள்வி. நான் ஒரு பெண்ணை மட்டுமே விரும்புகிறேன். அப்பெண்ணின் குணநலன்கள் குறித்து கவலை ஏதுமில்லை. இருப்பினும் அப்பெண் என் தாய் சோனியா காந்தி மற்றும் பாட்டி இந்திரா காந்தி ஆகிய இருவரின் குணங்களும் கலந்து இருந்தால் நல்லது" எனத் தெரிவித்தார்.
மேலும், மோட்டார் சைக்கிள் மற்றும் சைக்கிள் ஓட்டுவதில் உள்ள தனது விருப்பத்தைப் பற்றி பேசிய ராகுல், "நான் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஓட்டியிருக்கேன். ஆனால் எலெக்ட்ரிக் பைக் ஓட்டியதில்லை. இந்த சீன நிறுவனத்தைப் பார்த்தீர்களா அங்கு எலக்ட்ரிக் மோட்டார்கள் கொண்ட சைக்கிள்கள் மற்றும் மலை பைக்குகள் உள்ளன. இது மிகவும் சுவாரஸ்யமான கான்செப்ட்" எனக் கூறினார்.
பப்பு குறித்த கேள்வி: "என்னை பப்பு என்று அழைப்பதால் எனக்கு ஒன்றும் குறைந்துவிடுவதில்லை. ஆனால், என்னை அவ்வாறு அழைப்பவர்கள் அவர்களது வாழ்க்கையில் வருத்தமாக இருக்கின்றனர். அவர்களது வாழ்க்கையின் உறவுகளின் சுமூகமின்மை நிலவுகிறது. நான் எதைப்பற்றியும் கவலைப்படவில்லை. நிம்மதியாக இருக்கிறேன். என்னை பற்றி நல்லவிதமான விமர்சனங்களை வரவேற்கிறேன்” இவ்வாறு கூறினார்.
இதையும் படிங்க:பாஜக - திமுக கூட்டணியா? முற்றுப்புள்ளி வைத்த மு.க.ஸ்டாலின்!