தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

Madhya Pradesh Election 2023: காங்கிரஸ் 150 இடங்களில் வெற்றி பெறும்.. ராகுல் காந்தி கணிப்பு! - ராகுல் காந்தி மத்திய பிரதேச சட்டப் பேரவை தேர்தல்

மத்திய பிரதேச சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 150 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடிக்கும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்து உள்ளார்.

Rahul Gandhi
Rahul Gandhi

By

Published : May 29, 2023, 10:25 PM IST

டெல்லி :மத்திய பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் 150 இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என ராகுல் காந்தி கணித்து உள்ளார்.

230 தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேச சட்டப்பேரவைக்கு இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது அங்கு பாஜக ஆட்சி நிலவுகிறது. அரியணையை தக்க வைக்க பாஜகவும், மீண்டும் அரியணையில் ஏற காங்கிரஸ் கட்சியும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

மத்திய பிரதேச சட்டப் பேரவையில் 230 தொகுதிகள் உள்ள நிலையில் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 116 இடங்கள் தேவைப்படுகின்றன. கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக 160க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றி அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது.

அந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெறும் 58 இடங்களை மட்டுமே கைப்பற்றி படுதோல்வியை சந்தித்தது. இந்நிலையில், கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அப்படியே தலைகீழ் நிலை நிலவியது. மாநிலத்தில் பாஜக ஆட்சி மீது மக்களுக்கு கடும் அதிருப்தி நிலை உருவானதாக கூறப்பட்டது.

அந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 114 இடங்களையும், பாஜக 109 இடங்களையும் வென்றது. எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கூட்டணி கட்சிகளின் உதவியுடன் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது. இதில் முதலமைச்சர் பதவிக்கு கடும் போட்டி நிலவியது. மூத்த காங்கிரஸ் தலைவர் கமல்நாத் மற்றும் தற்போதைய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோரிடையே கடும் போட்டி நிலவியது.

இறுதியில் கமல்நாத் வெற்றி பெற்று மத்திய பிரதேச மாநிலத்தின் முதலமைச்சராக பதவியேற்றார். காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுக் கொண்டு இருந்த நிலையில், அதிருப்தியில் இருந்த ஜோதிராதித்ய சிந்தியா தலைமையிலான காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பாஜகவுக்கு கட்சித் தாவியதால் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது.

கமல்நாத் முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, பாஜகவின் சிவராஜ் சிங் சவுகான் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில், நடப்பாண்டு இறுதியில் மத்திய பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஆட்சியைக் தக்கவைக்க பாஜகவும், பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ் கட்சியும் மும்முரம் காட்டி வருகின்றன.

இந்நிலையில், டெல்லியில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் மத்திய பிரதேச தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய பிரதேச முன்னாள் முதலமைச்சர் கமல்நாத், முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் பி. அகர்வால் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.

ஆலோசனையை தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, தேர்தல் குறித்து நீண்ட விவாதம் நடத்தினோ. கர்நாடகாவில் 135 இடங்களை கைப்பற்றினோம். அதேபோல் மத்திய பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் 150 இடங்களை கைப்பற்றி அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும் என்றார்.

தொடர்ந்து பேசிய மத்திய பிரதேச முன்னாள் முதலமைச்சர் கமல்நாத், இந்தத் தேர்தலில் கட்சி போட்டியிட வேண்டிய வியூகம் மற்றும் பிரச்சினைகள் குறித்து அனைவரும் விவாதித்தோம். நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக தேர்தல் களத்தில் இறங்குவோம் என்ற எண்ணத்தில் இருக்கிறோம் என்றார்.

இதையும் படிங்க :கணவரை எரித்துக் கொன்ற மனநலன் பாதித்த மனைவி... எதுக்கு தெரியுமா?

ABOUT THE AUTHOR

...view details