உத்தரப் பிரதேசம், மணிப்பூர், உத்தரகாண்ட, பஞ்சாப், கோவா மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று(மார்ச்.10) நடந்துவருகிறது. இதில் பஞ்சாபைத் தவிர்த்து, மற்ற மூன்று மாநிலங்களிலும் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. பஞ்சாபில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படுதோல்வியைச் சந்தித்துள்ளது.
இந்தியாவின் மிகப் பழமையும், புகழும் வாய்ந்த கட்சியான காங்கிரஸ், தொடர் தோல்விகளால் தத்தளித்துவருவது அக்கட்சியினர் இடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் காங்கிரஸ் கட்சி முதலமைச்சர்கள் சத்தீஸ்கர், பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மூன்று மாநிலங்களில் பதவிவகித்துவருகின்றனர். இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தை ஆம் ஆத்மி கைப்பற்றிவிட்டது. இந்தத் தோல்வி குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மக்களின் தீர்ப்பைப் பணிவுடன் ஏற்றுக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.