தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மீண்டும் கைதாகி விடுதலையானார் பிரியங்கா காந்தி

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உத்தரப் பிரதேச காவல்துறையினரால் மீண்டும் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.

பிரியங்கா காந்தி
பிரியங்கா காந்தி

By

Published : Oct 20, 2021, 6:58 PM IST

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி அங்கு தீவிர களப்பணியாற்றிவருகிறார். ஆக்ராவைச் சேர்ந்த துப்புரவைத் தொழிலாளர் ஒருவர் போலீஸ் காவலில் உயிரிழந்தார்.

அவரது குடும்பத்தினரைக் காண, பிரியங்கா காந்தி இன்று ஆக்ரா நோக்கி பயணம் செய்த நிலையில், லக்னோ-ஆக்ரா எக்ஸ்பிரஸ்வேயில் அம்மாநில காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

அவரை ஆக்ரா செல்ல அனுமதிக்கமுடியாது என மாநில காவல்துறை தடுத்து நிறுத்தியது. தன்னை ஏன் அனுமதிக்க முடியாது என காவல்துறையிடம் கேள்வி எழுப்பிய பிரியங்கா, விடமறுத்தால் போராட்டம் செய்வதாக அறிவித்தார்.

மீண்டும் கைதான பிரியங்கா காந்தி

அவரை கைது செய்த காவல்துறை லக்னோவில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்க வைத்தது. பின்னர், பிரியங்கா காந்தியுடன் மூன்று பேர் மட்டும் ஆக்ரா சென்று உயிரிழந்தவரை பார்க்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது.

இதையடுத்து, லக்னோவிலிருந்து ஆக்ரா நோக்கி பிரியங்கா காந்தி புறப்பட்டார். ஏற்கனவே லக்கிம்பூரில் வன்முறையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினரை காண பிரியங்கா சென்றபோது இதேபோல் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெண் காவலர்களுடன் புகைப்படம் எடுத்த பிரியங்கா

உத்தரப் பிரதேசத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் முகமாக பிரியங்கா காந்தி முன்னிறுத்தப்படுகிறார். தேர்தலில் 40 விழுக்காடு இடங்களில் போட்டியிட பெண்களுக்கு காங்கிரஸ் கட்சி வாய்ப்பளிக்கும் என அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க:ஊழல்வாதிகள் யாராக இருந்தாலும் அரசு சாட்டையை சுழற்றும் - பிரதமர் மோடி

ABOUT THE AUTHOR

...view details