புதுடெல்லி: இரு தசாப்தங்களுக்கு முன்பு தமிழில் முன்னணி நடிகையாக வலம்வந்தவர் நக்மா. இந்த நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் இணைந்து முன்னணி நட்சத்திர பேச்சாளராக வலம்வந்தார். பல்வேறு மாநில சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலிலும் காங்கிரஸிற்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தொடர்ந்து இவருக்கு காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பதவிகள் வழங்கப்பட்டன. அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளர் மற்றும் ஜம்மு- காஷ்மீர், லடாக், புதுச்சேரி மாநில காங்கிரஸ் பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், மாநிலங்களவைக்கு காங்கிரஸ் சார்பில் தேர்வானவர்களுக்கு நடிகை நக்மா ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகை நக்மா அதிருப்தி: தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு ஆதங்கத்தின்பால் சில கேள்விகளையும் கேட்டுள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் காங்கிரஸ் சார்பில் மாநிலங்களைக்கு தேர்வானவர்களின் பட்டியலை பகிர்ந்துள்ள நக்மா, “மாநிலங்களவைக்கு தேர்வான அனைவருக்கும் வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.