டெல்லி:காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். "காங்கிரஸ் கட்சி உடனான எனது அரை நூற்றாண்டு பழமையான தொடர்பை மிகுந்த வருத்தத்துடனும், வலியுடனும் துண்டிக்க முடிவு செய்துள்ளேன்" என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எழுதிய ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் விலகல் - ghulam nabi azad joining bjp
காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.
ஜம்மூ காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சரான ஆசாத், காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை குழு தலைவர், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்தவர். இவரது மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் முடிந்ததும் கட்சியில் அவருக்கென எந்த பதவியும் வழங்கப்படாமல் இருந்தது. இதன் காரணமாக ஆசாத், அதிருப்தியில் இருந்ததாக கூறப்பட்டது. இதனிடையே ஜம்மு காஷ்மீர் தேர்தல் பிரச்சாரக் குழுத் தலைவராக ஆசாத்தை காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி நியமித்தார். இருப்பினும் ஆசாத் அந்தப் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துவிட்டார்.
இதையும் படிங்க:முதல்முறையாக நேரடி ஒளிபரப்பாகும் உச்ச நீதிமன்ற வழக்கு விசாரணை