தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்தியா கூட்டணி ஒருங்கிணைப்பாளராக கார்கே தேர்வு! கூட்டணியிலும் ஆதிக்கம் செலுத்துகிறதா காங்கிரஸ்?

இந்திய கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பை பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் நிராகரித்த நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 13, 2024, 3:58 PM IST

டெல்லி :இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிஜார்ஜூன கார்கே நியமிக்கப்பட்டு உள்ளார். விரைவில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை எதிர்த்து, காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், பீகார் பிஜூ ஜனதா தளம், ஜார்கண் முக்தி மோர்ச்சா உள்ளிட்ட 28 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கி உள்ளன.

நான்கு கட்டங்களாக நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் தொகுதி பங்கீடு உள்ளிட்ட முக்கிய முடிவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றன. கடைசியாக டிசம்பர் மாதம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் வேட்பாளர், தொகுதி பங்கீடு மற்றும் இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் தேர்வு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இந்நிலையில், இன்று (ஜன. 13) காணொலி வாயிலாக இந்தியா கூட்டணியின் தலைவர்கள் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர். இதில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக பீகார் முதலமைச்சர் மற்றும் பிஜூ ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார் பொறுப்பேற்க கோரி கூட்டணி கட்சிகள் வலியுறுத்தின. இருப்பினும், ஒருங்கிணைப்பாளர் பொறுப்பை நிதிஷ் குமார் நிராகரித்தார். இதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் பெயர் முன்மொழியப்பட்ட நிலையில், தொடர்ந்து அவரே தேர்வு செய்யப்பட்டார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தனிப்பட்ட காரணங்களுக்காக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி கலந்து கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை தொகுதி பங்கீடு குறித்து ஆம் ஆத்மி - காங்கிரஸ் கட்சிகள் இணைந்து ஆலோசனை நடத்தின.

ஆம் அத்மி எம்.பி. முகுல் வாஷ்னிக் இல்லத்தில் வைத்து நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தொகுதி பங்கீடு குறித்து இரு கட்சிகளும் சுமூக தீர்வு கண்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. விரைவில் அடுத்த கட்ட தொகுதி பங்கீடு குறித்து இந்தியா கூட்டணி கட்சிகள் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க :இந்தியா கூட்டணி காணொலி ஆலோசனை கூட்டம்: மு.க.ஸ்டாலின், கனிமொழி, கார்கே, ராகுல் பங்கேற்பு!

ABOUT THE AUTHOR

...view details