கர்நாடகா: கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பெரும்பாலான இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.
- கர்நாடக முன்னாள் முதலமைச்சரும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான ஹெச்.டி.குமாரசாமி சன்னபட்டணா தொகுதியில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சிபி யோகேஸ்வர் தோல்வியடைந்தார்.
- காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா வருணா தொகுதியில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் வி.சோமண்ணா தோல்வியடைந்தார். சோமண்ணா வருணா மற்றும் சாமராஜநகர் தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், இரண்டிலும் தோல்வியைச் சந்தித்தார்.
- ராமநகர் தொகுதியில் ஹெச்.டி. குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி தோல்வியடைந்தார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் இக்பால் ஹூசைன் வெற்றி பெற்றார்.
- ஹலியாலா தொகுதியில் பாஜக வேட்பாளர் சுனில் ஹெக்டேவை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ஆர்.வி.தேஸ்பாண்டே வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் ஆர்.வி. தேஷ்பாண்டே 9வது முறையாக வெற்றி பெற்று சாதனைப் படைத்தார்.
- பாபலேஷ்வர் தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான எம்.பி. பாட்டீல் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் விஜு கவுடா பாட்டீல் தோல்வியடைந்தார்.
- நிப்பானி தொகுதியில் பாஜக வேட்பாளரான அமைச்சர் சசிகலா ஜொல்லே வெற்றி பெற்றார்.
- சர்வஜ்னா நகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான கே.ஜே. ஜார்ஜ் வெற்றி பெற்றார்.
- கங்காவதி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் இக்பால் அன்சாரியை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் கலி ஜனார்த்தன ரெட்டி வெற்றி பெற்றார். ஜனார்த்தன ரெட்டி அண்மையில் பாஜகவிலிருந்து விலகி புதிய கட்சியைத் தொடங்கியவர்.
- சித்தப்பூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்க் கார்கே வெற்றி பெற்றார், பாஜக வேட்பாளர் மணிகாந்த் ரத்தோட் தோல்வியடைந்தார்.
- தாவணகெரே வடக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.எஸ்.மல்லிகார்ஜூன் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் லோகிகெரே நாகராஜ் தோல்வியடைந்தார்.
- கொரட்டகெரே தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜி.பரமேஷ்வர் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜேடிஎஸ் வேட்பாளர் சுதாகர் லால் மற்றும் பாஜக வேட்பாளர் அனில் குமார் இருவரும் தோல்வியடைந்தனர்.
- ராஜாஜி நகர் தொகுதியில் பாஜக வேட்பாளர் சுரேஷ்குமார் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் புட்டண்ணா தோல்வியடைந்தார். புட்டண்ணா அண்மையில் பாஜகவிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்தவர்.