உத்தரப் பிரதேசம் மாநிலம் உன்னாவ் பகுதியில், பாஜக எம்.பி. சாக்ஷி மகாராஜ், பேரணி ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றினார்.
'நேதாஜியை காங்கிரஸ்தான் கொன்றது' - பாஜக எம்பி! - Subhas Chandra Bose killed
லக்னோ: நேதாஜி சுபாஷ் சந்திர போஸை, காங்கிரஸ்தான் கொன்றது என பாஜக எம்.பி. சாக்ஷி மகாராஜ் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அப்போது பேசுகையில், "சுபாஷ் சந்திர போஸை காங்கிரஸ்தான் கொன்றது. மகாத்மா காந்தியோ அல்லது பண்டிட் நேருவோ அவரது புகழ் முன் நிற்க முடியாது" என்றார்.
நாடு முழுவதும் அவரின் 125ஆவது பிறந்தநாளை கொண்டாடும் சமயத்தில், பாஜக எம்.பியின் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் 18, 1945 தேதியன்று தைபேயில் நடந்த விமான விபத்தில் போஸ் இறந்தது பெரும் சர்ச்சையாகவே இருந்து வந்தது. இச்சம்பவத்தில் அவர் விபத்தில்தான் இறந்துவிட்டார் என்பதை மத்திய அரசு 2017இல் ஆர்டிஐ மூலம் உறுதிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.