தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை திரும்ப பெறவேண்டும்' - முத்தரசன் - puducherry governor

புதுச்சேரி: மக்கள் விரோத துணை நிலை ஆளுநரை புதுச்சேரியில் இருந்து மாற்ற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

முத்தரசன்
முத்தரசன்

By

Published : Jan 9, 2021, 6:32 PM IST

புதுச்சேரி காங்கிரஸ் கூட்டணிக் கட்சி சார்பில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இது தனிப்பட்ட நபரை எதிர்த்து நடத்தும் போராட்டம் அல்ல. ஆளுநர் கிரண்பேடி ஜனநாயகத்திற்கு விரோதமாக, அரசியலமைப்பு சட்டத்திற்கு புறம்பாக, புதுச்சேரி மக்களுக்கு எதிராக, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கு எதிராக போர் நடத்தி வருகின்றார்.

புதுச்சேரி மக்களுக்கு சட்டபூர்வமான சலுகைகளை வழங்குவதற்கு, நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை ஆளுநரின் நடவடிக்கையால் தடுத்து நிறுத்தப்படுகின்றது.

மக்கள் விரோத துணை நிலை ஆளுநரை புதுச்சேரியில் இருந்து மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி ஜனநாயக ரீதியாக இந்த போராட்டம் நடைபெறுகின்றது. இந்த கோரிக்கையை மத்திய அரசு செவிமடுத்து கேட்டு ஆளுநர் கிரண்பேடியை திரும்பப் பெற வேண்டும்" எனத் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details