புது டெல்லி: கர்நாட மாநிலத்தில் அரசு ஒப்பந்ததாரராக இருந்தவர் சந்தோஷ் பாட்டீல். இவர் தனது தற்கொலை கடிதத்தில், கர்நாடக அமைச்சர் ஈஸ்வரப்பா மீது குற்றஞ்சாட்டியிருந்தார்.
அதாவது பில்களை கிளீயர் செய்ய 40 சதவீதம் வரை கமிஷன் கேட்பதாக கூறியிருந்தார். இது கர்நாடக மாநில அரசியலில் புயலை கிளப்பியிருக்கும் நிலையில் இது தொடர்பாக உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் எனக் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
தற்கொலை செய்துகொண்ட கான்ட்ராக்டர் சந்தோஷ் பாட்டீல் இது குறித்து ட்விட்டரில் ராகுல் காந்தி, “தனது சொந்தக் கட்சி கான்ட்ராக்டரின் உயிருக்கு பாஜகவின் 40 சதவீத கர்நாடக கமிஷன் அரசு பொறுப்பாகியுள்ளது. உயிரிழந்தவர் பிரதமருக்கு எழுதிய கடிதத்துக்கும் பதில் இல்லை. பிரதமரும், முதலமைச்சரும் இதற்கு உடந்தை” எனக் கூறியுள்ளார்.
இதற்கிடையில் ஈஸ்வரப்பாவை கைது செய்து விசாரிக்க வேண்டும் எனக் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்த ராமையா வலியுறுத்தியுள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட சந்தோஷ் பாட்டீலின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல்கள். அவரின் இறப்புக்கு நியாயம் கிடைக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : வங்கி மோசடி வழக்கு - நீரவ் மோடியின் கூட்டாளி எகிப்தில் கைது